ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.
கமுதி,
கமுதி அருகே மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கீழராமநதி, கிளாமரம், காவடிபட்டி மற்றும் பல கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்தம் மற்றும் சுகாதார பணிகள் மிகவும் சிறப்புடனும் மருத்துவமனையின் சிறந்த நடவடிக்கைக்காக, இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2019 -ம் ஆண்டிற்கான மத்திய அரசின் காயகல்ப விருது வழங்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதல் இடத்தை இந்த சுகாதார நிலையம் பிடித்துள்ளது. பரமக்குடி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ரவீந்திரன் இதற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை பேரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அசோக் மற்றும் மேலராமநதி மருத்துவ அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோரிடம் வழங்கினார். இந்த விருது பெறுவதற்கு காரணமாக இருந்த அனைத்து சுகாதார அலுவலர்களை துணை இயக்குனர் பாராட்டினார்.
Related Tags :
Next Story