பெங்களூருவில் ஊரடங்கின் போது குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது


பெங்களூருவில் ஊரடங்கின் போது குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2021 2:17 AM IST (Updated: 4 July 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஊரடங்கின் போது குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.26.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:
  
கொரோனா பரவலால் ஊரடங்கு

  கர்நாடகத்தில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்தது. அப்போது தினசரி பாதிப்பு 50 ஆயிரமாக இருந்தது. தினமும் 500 பேர் இறந்தனர். இதனால் பாதிப்பு, உயிரிழப்பை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு மே, ஜூன் மாதங்களில் அரசு ஊரடங்கு அமல்படுத்தியது.

  குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இதன் விளைவாக தற்போது பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து விட்டது. இந்த நிலையில் மே, ஜூன் மாதங்களில் கொரோனா ஊரடங்கின் போது பெங்களூருவில் குற்றச்சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

167 பேர் கைது

  அதாவது ஊரடங்கை பயன்படுத்தி காசு வைத்து சூதாட்டம், கிரிக்கெட் சூதாட்டம், போதைப்பொருட்கள் விற்பனை, கஞ்சா விற்பனை, விபசாரம் என குற்றச்சம்பவங்கள் நடந்து உள்ளது. இதுதொடர்பாக 167 பேரை கைது செய்த போலீசார் ரூ.26.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

  ஜே.ஜே.நகர், பேடராயனபுரா, சாம்ராஜ்பேட்டை, கே.ஜி.ஹள்ளி, அல்சூர், உப்பார்பேட்டை, பானசாவடி, ராஜகோபால்நகர், எலகங்கா, வில்சன் கார்டன், சிக்கஜாலா, கெங்கேரி, மகாலட்சுமி லே-அவுட், கமர்சியல் தெரு, சதாசிவநகர், மாரத்தஹள்ளி, இந்திராநகர், சந்திரா லே-அவுட், புட்டேனஹள்ளி, கோரமங்களா, மல்லேசுவரம், பசவனகுடி, சுத்தேகுண்டேபாளையா, சுப்பிரமணியநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விபசார வழக்கில் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story