குடிபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தவர் கார் ஏறி இறங்கியதில் சாவு


குடிபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தவர் கார் ஏறி இறங்கியதில் சாவு
x
தினத்தந்தி 4 July 2021 8:23 AM IST (Updated: 4 July 2021 8:23 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தவர் மீது கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி டிரங்க் சாலையை ஒட்டி சீனிவாசா நகர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே சாலையோரம் ஒருவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்து விட்டு போதையில் படுத்து கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார், அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர், பூந்தமல்லியை அடுத்த படூர் பகுதியை சேர்ந்த ரகுபதி (வயது 38) என்பது தெரியவந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ரகுபதி மீது மோதிய காரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story