மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம் + "||" + Women protest against the increase in gas cylinder prices

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
திருவொற்றியூர், 

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, எர்ணாவூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பாக்கியம் தலைமையில் பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, மாலைகள் அணிவித்து, அதை சுற்றி வந்து கும்மி அடித்து, ஒப்பாரி பாடல் பாடினர். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் பகுதி தலைவர் செல்வகுமாரி, செயலாளர் புஷ்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.