மேம்பாலத்தில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த கார்: படுகாயம் அடைந்த டிரைவரும் சிகிச்சை பலனின்றி சாவு


மேம்பாலத்தில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த கார்: படுகாயம் அடைந்த டிரைவரும் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 4 July 2021 10:52 AM IST (Updated: 4 July 2021 10:52 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றபோது கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவரும் சிகிச்சை பலனின்றி சாவு

பூந்தமல்லி, 

சென்னையை அடுத்த மாங்காட்டை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 48). கால் டாக்சி டிரைவரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலப்பன்சாவடியில் இருந்து தச்சுத்தொழிலாளி அர்ஜூனன் என்பவரை காரில் சேத்துப்பட்டு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த அர்ஜூனன், காருக்குள்ளேயே தீயில் கருகி பலியானார். டிரைவர் சுனில்குமார் பலத்த தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் சுனில்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story