தூசி அருகே திருநங்கையை கேலி கிண்டல் செய்து தடியால் தாக்கியவர் கைது


தூசி அருகே திருநங்கையை கேலி கிண்டல் செய்து தடியால் தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 4 July 2021 5:38 PM IST (Updated: 4 July 2021 5:38 PM IST)
t-max-icont-min-icon

திருநங்கையை கேலி கிண்டல் செய்து தடியால் தாக்கியவர் கைது

தூசி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா வடகல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் எதிரில் வசிப்பவர் திருநங்கை பச்சையம்மாள். இவர், நேற்று முன்தினம் காஞ்சீபுரம் செல்வதற்காக பஸ்சில் ஏற சென்றுள்ளார். 

அவரை, வாழவந்தல் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (வயது 47), இவருடைய மனைவி ரேணுகா, இவருடைய தாயார் லட்சுமி ஆகியோர் சேர்ந்து கைதட்டி கேலி கிண்டல் செய்துள்ளனர். மோகன் தடியால் திருநங்ைக பச்சையம்மாளை அடித்து காயப்படுத்தி உள்ளார். அதில் பலத்த காயம் அடைந்த பச்சையம்மாள் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

இதுகுறித்து திருநங்கை, தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரேணுகா, லட்சுமிைய வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story