திருவண்ணாமலையில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா
திருவண்ணாமலையில் தனியார் செல்ேபான் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
அமைதி கூட்டம்
திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமிநகர் ஆறுமுகம் தெருவில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்துள்ளது. இதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் திருவண்ணாமலை கிழக்குப் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரை போலீசார் அழைத்து அமைதி கூட்டம் நடத்தினர். அதில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சமரசம் ஆகாமல் சென்று விட்டனர். நேற்று காலை தனியார் செல்போன் டவர் அமைக்கும் இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு செல்போன் டவர் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், செல்போன் டவர் அமைக்கும் பணிைய வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியும் கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து செல்போன் டவர் அமைக்க தடை விதிக்க வேண்டும், எனக் கோரிக்ைக விடுத்தனர்.
சமரசம்
திருவண்ணாமலை கிழக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ேவங்கிக்கால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story