மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் அருகேமுதியவர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + oldman arrested under pokcho act near sathankulam

சாத்தான்குளம் அருகேமுதியவர் போக்சோ சட்டத்தில் கைது

சாத்தான்குளம் அருகேமுதியவர் போக்சோ  சட்டத்தில் கைது
சாத்தான்குளம் அருகே போக்சோ சட்டத்தில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி (65). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மற்றொரு ஊரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த ஊரில் வசிக்கும் மற்றொரு பகுதியைச் சேர்ந்த உறவினர் மகளும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானதாகத் தெரிகிறது. இதையறிந்த சிறுமியின் தாயார் தங்கப்பாண்டியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதையடுத்து முதியவரின் மகள், மகன் இருவரும் சிறுமியின் தாயாருக்கு கொலைமிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சிறுமியின் தாயார், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் இந்திரா, தங்கபாண்டி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
மேலும் மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவரது மகள் மற்றும் மகன் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தங்கப்பாண்டி, சாத்தான்குளம் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக  கிடைத்த தகவலை தொடர்ந்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த முதியவர் தங்கப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மகன், மகளை போலீசார் தேடிவருகின்றனர்.