மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் சூதாடிய 3பேர் கைது + "||" + 3 arrested for gambling in thoothukudi

தூத்துக்குடியில் சூதாடிய 3பேர் கைது

தூத்துக்குடியில் சூதாடிய 3பேர் கைது
தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடிமுத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் முத்தையாபுரம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சூசைநகர் அருகே உள்ள காட்டு பகுதியில் போலீசாரை கண்டதும் ஓட முயன்ற 3பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் முத்தையாபுரம் வேலாயுத நகரை சேர்ந்த செல்வம் (வயது 56), பாலம் பெரியசாமி நகரைச் சேர்ந்த பொன்னையா (35), கோயில்பிள்ளை நகர் தங்கபாண்டி (48) என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடிய தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து
சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.