மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற தம்பதி கைது + "||" + Store at home Couple arrested for selling kanja

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற தம்பதி கைது

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற தம்பதி கைது
வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டுக்கல் தெற்கு போலீசார், அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டின் ஒரு அறையில், சாக்கு மூட்டையில் 4½ கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் இருந்த தம்பதியினரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் வேளாங்கண்ணி (வயது 51), அவருடைய மனைவி ஆரோக்கியமேரி (49) என்பதும், வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.