மாவட்ட செய்திகள்

ஏரல் அருகேகார் மோதி கல்லூரி மாணவர் சாவு + "||" + college student killed in car crash near earal

ஏரல் அருகேகார் மோதி கல்லூரி மாணவர் சாவு

ஏரல் அருகேகார் மோதி கல்லூரி மாணவர் சாவு
ஏரல் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ஏரல்:
தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சும்சுதீன் (வயது 50). இவருக்கு செய்யது அலி பாத்திமா (வயது 45) என்ற மனைவியும் இஜாஸ் முகமது(19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இஜாஸ் முகமது கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று குடும்பத்துடன் ஆம்னி வேனில் ஏரல் அருகே உள்ள மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சம்சுதீன் வந்திருந்தார். மதியம் மங்கலக்குறிச்சி டீக்கடை அருகே  இஜாஸ் முகமது சாலையோரத்தில் நடந்து சென்றபோது எதிரே வந்த ஒரு கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இஜாஸ் முகமது வழியிலேயேபரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கோரம்பள்ளம் பொன்ராஜ் சுரேஷ் (வயது 53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.