வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 252 பேருக்கு கொரோனா தொற்று
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ராணிப்பேட்டை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 51 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 94 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதிலும் 596 பேர் தொற்றுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மேலும் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டம் முழுவதும் 223 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று 127 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 49 ஆயிரத்து 990 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 48 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட 1,207 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 604 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story