குடியாத்தம் அருகே கன்றுக்குட்டியை திருடிய 3 பேர் கைது
குடியாத்தம் அருகே கன்றுக்குட்டியை திருடிய 3 பேர் கைது
குடியாத்தம்
குடியாத்தத்தை அடுத்த பாக்கம் பகுதியில் பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த ஒரு மோட்டார்சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களின் நடுவே ஒரு கன்றுக்குட்டியை கொண்டு வந்தனர்.
அவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை, பரதராமி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரித்தனர். அவர்கள் பேரணாம்பட்டு கள்ளிச்சேரியை சேர்ந்த வெங்கடேசனின் மகன் பாண்டித்துரை (வயது 26), பேரணாம்பட்டு சிவராஜ்புரத்தைச் சேர்ந்த அப்துல்பாஷாவின் மகன் எஜாஸ்அகமது (25), பேரணாம்பட்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த அன்புவின் மகன் சுபாஷ் (25) எனத் தெரிய வந்தது.
3 பேரும் ஆந்திரா சென்று, அங்கிருந்து பேரணாம்பட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, வழியில் குடியாத்தத்தை அடுத்த தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (62) என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டிைய திருடி மோட்டார்சைக்கிளில் வைத்துக் கொண்டு வந்ததாக கூறினர். இதையடுத்து பாண்டித்துரை, எஜாஸ்அகமது, சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story