வேதாரண்யம் அருகே தீ விபத்து அ.தி.மு.க. பிரமுகரின் 2 கார்கள் சேதம்


வேதாரண்யம் அருகே தீ விபத்து அ.தி.மு.க. பிரமுகரின் 2 கார்கள் சேதம்
x
தினத்தந்தி 4 July 2021 9:40 PM IST (Updated: 4 July 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே தீ விபத்தில் அ.தி.மு.க. பிரமுருக்கு சொந்தமான 2 கார்கள் சேதம் அடைந்தன.

வேதாரண்யம்:-

வேதாரண்யம் அருகே தீ விபத்தில் அ.தி.மு.க. பிரமுருக்கு சொந்தமான 2 கார்கள் சேதம் அடைந்தன. 

அ.தி.மு.க. பிரமுகர்

நாகை மாவட்டம் கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. அ.தி.மு.க. பிரமுகரான இவர் வேதாரண்யம் நிலவள வங்கியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு சொந்தமான வயல் அவருடைய வீட்டுக்கு எதிரே உள்ளது. 
அந்த வயலில் நேற்று முன்தினம் சணப்பயிர் கழிவுகளை அகற்றி தீயிட்டு எரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது காற்றின் வேகத்தால் பிரபுவின் வீட்டுக்கு முன்புறம் இருந்த கீற்று கொட்டகையில் தீப்பிடித்தது.  

கார்கள் சேதம்

இந்த தீ மளமளவென அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 கார்களுக்கும் பரவியது. இதை அறிந்த வேதாரண்யம் தீயணைப்பு படைவீரர்கள் நிலைய அதிகாரி கந்தசாமி தலைமையில் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். 
இதில் கொட்டகை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் உள்பட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story