திருப்பத்தூரில் இயங்கி வந்த 4 கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் மூடப்பட்டது


திருப்பத்தூரில் இயங்கி வந்த 4 கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் மூடப்பட்டது
x
தினத்தந்தி 4 July 2021 4:12 PM GMT (Updated: 4 July 2021 4:12 PM GMT)

திருப்பத்தூரில் இயங்கி வந்த 4 கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் மூடப்பட்டது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க புதுப்பேட்டை அக்கரகாரம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி, வாணியம்பாடி யுவானி கேர், ஆம்பூர் கன்னிகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி என 4 இடத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டது. கொரோனா தோற்று பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சைக்கு சேர்ந்தவர்களுக்கு கபசுர குடிநீர், பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், சத்தான உணவுகள் வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை சுமார் 2,500 பேர் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை 35-க்கும் கீழ் குறைந்து வருவதால் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் மூடப்பட்டதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மா கூறினார். சித்த மருத்துவ சிகிச்சை அளித்த அரசு சித்த மருத்துவர்கள் விக்ரம் குமார், உமேரா, ஆகியோரை கலெக்டர் அமர்குஷ்வாஹா பாராட்டி பரிசு வழங்கினார்.

Next Story