மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு + "||" + In the Vedaranyam New bus station Space to be set up Study by Collector Arun Thamburaj

வேதாரண்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு

வேதாரண்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
வேதாரண்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்,

வேதாரண்யம் நகரில் போலீஸ் நிலையம் எதிரே பஸ் நிலையம் உள்ளது. தற்போது இங்கிருந்து 70 பஸ்கள் பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாததால் வேதாரண்யம் நாகை சாலையில் குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே 4 ஏக்கரில் ரூ.4 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.

புதிய பஸ் நிலையம் அமைக்க உள்ள இடத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், தாசில்தார் ரமாதேவி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பொறியாளர் பிரதான் பாபு மற்றும் நில அளவர்கள் உடனிருந்தனர்.

இதை தொடர்ந்து கலெக்டர், தாசில்தார் அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவரிடம் மனுவை பெற்று கொண்டு அவரிடம் கனிவுடன் கோரிக்கையை கேட்டறிந்தார்.

இதேபோல வேளாங்கண்ணியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் வேளாங்கண்ணியில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தையும், அங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமினையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் செருதூர் மீனவ கிராமத்தில் வெள்ளையாற்றில் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் செய்தி தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் அருண்பதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து நாகை நகராட்சி பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை கலெக்டர் செய்தார். ஆசாத் மார்க்கெட், பெரிய கடைத்தெரு, யாதவ கடைத்தெரு, பெருமாள் தெற்கு வீதி, புளியமரத்தடி, பப்ளிக் ஆபீஸ்ரோடு, தாமரைக்குளம் மற்றும் நாகூர் தெற்கு தெரு, தர்கா அலங்கார வாசல், மார்க்கெட் ஆகிய இடங்களில் நடந்த தூய்மை பணிகளை பார்வையிட்டு, நகரப் பகுதிகளை மேலும் தூய்மையாக பராமரிக்க நகராட்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி பொறியாளர் வசந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
2. நாளை திறக்கப்படுவதையொட்டி தஞ்சையில், உடற்பயிற்சி கூடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
நாளை திறக்கப்படுவதையொட்டி தஞ்சையில், உடற்பயிற்சி கூடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. வேதாரண்யத்தில் பழமையான கோவில் மாயமானதாக புகார் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
வேதாரண்யத்தில், பழமையான கோவில் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. வேதாரண்யத்தில், டன் கணக்கில் வீணாகும் முல்லைப் பூக்கள்
வேதாரண்யத்தில் முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் டன் கணக்கில் முல்லைப்பூக்கள் வீணாகிறது. விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.