குருவிசெட்டிதாங்கல் ஏரியில் கழிவுநீரை கொட்ட முயன்ற டேங்கர் லாரி பறிமுதல். டிரைவர் கைது
குருவிசெட்டிதாங்கல் ஏரியில் கழிவுநீரை கொட்ட முயன்ற டேங்கர் லாரி பறிமுதல்
சிப்காட்
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குருவிசெட்டிதாங்கல் ஏரி உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிப்காட் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுநீரை ஏற்றி வந்த ஒரு டேங்கர் லாரி குருவிசெட்டிதாங்கல் ஏரியில் கொட்ட முயன்றது.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு ந்து டேங்கர் லாரியை மடக்கினர். உடனே அவர்கள், சிப்காட் போலீசாருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து கழிவுநீரை கொண்டு வந்த டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர். சிப்காட் காமராஜர்நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மணிமுத்து (வயது 27) கைது செய்யப்பட்டார். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story