தாராபுரம்கோவில்களில் பக்தர்கள் தரிசிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
தாராபுரம்கோவில்களில் பக்தர்கள் தரிசிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
தாராபுரம்:
கோவில்களில் பக்தர்கள் தரிசிக்க இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இதையொட்டி தாராபுரம் பகுதி கோவில்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்களாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இன்று (திங்கட்கிழமை) முதல் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு ஊரடங்கால் மேலும் சில தளர்வுகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக 80 நாட்களுக்கு பிறகு காடு அனுமந்தராய சுவாமி கோவில், கல்யாண ராமர் கோவில், ஈஸ்வரன் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.
தூய்மை செய்யும் பணிகள்
அதற்காக கோவில் வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கோவிலினுள் கதவுகள், கொடிமரம், கோவில் நடை ஆகிய பகுதிகளை தூய்மை செய்து எந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காடு அனுமந்தராய சுவாமி கோவில் கடந்த ஏப்ரல் 16-ந்தேதி மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் தினமும் 4 கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன. இந்த நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்ததையடுத்து, கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகள் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசின் வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்தபின் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story