கிணற்றில் தவறி விழுந்து 6 ம் வகுப்பு மாணவன் சாவு


கிணற்றில் தவறி விழுந்து 6 ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 4 July 2021 10:23 PM IST (Updated: 4 July 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் கிணற்றில் தவறி விழுந்து 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

ஆரணி-

பள்ளி மாணவன்

ஆரணி சைதாப்பேட்டை பவர்ஹவுஸ் தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல், பட்டு நெசவுத் தொழிலாளி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 11). அனந்தபுரம் நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். 

இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது அண்ணன் பார்த்திபன் (13), அவரது நண்பன் நரசிம்மன் (13) ஆகிய 3 பேரும் சேர்ந்து சைதாப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள குமாரசாமி என்பவருடைய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே இயற்கை உபாதையை கழிக்க ெசன்றனர். 

கிணற்றில் மூழ்கி சாவு

பின்னர் கிணற்றில் இறங்கியபோது கோபாலகிருஷ்ணன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.
இதை அறிந்ததும் அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆரணி தீயணைப்பு நிலைய அதிகாரி கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி கோபால கிருஷ்ணன் பிணமாக மீட்டனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story