வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற பெண்ணை மீட்டுத்தர வேண்டும் போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை

வெளிநாட்டு வேலைக்கு சென்ற பெண்ணை மீட்டு தரவேண்டும் என அப்பெண்ணின் சகோதரர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அய்யம்பேட்டை,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சரபோஜிராஜபுரம் கிராமம் மறவர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது சகோதரி சுந்தரி (வயது 38). கணவரால் கைவிடப்பட்டவர். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வழுத்தூரைச் சேர்ந்த ஒருவர் மூலம் குவைத் நாட்டில் உள்ள அபைசியா என்ற பகுதிக்கு வீட்டு வேலை செய்ய எனது சகோதரி சுந்தரி சென்றார்.
ஆனால் வேலைக்கு சென்ற இடத்தில் எனது சகோதரி கொடுமைப்படுத்தப்படுவதாக நானும், எனது குடும்பத்தினரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் அவரை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றோம். எனவே குவைத் நாட்டில் வீட்டு வேலைக்காக சென்ற எனது சகோதரி சுந்தரியை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story