மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க ஆய்வு கூட்டம்-கலெக்டர் தலைமையில் நடந்தது


மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க ஆய்வு கூட்டம்-கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 4 July 2021 10:51 PM IST (Updated: 4 July 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் மக்கள் வாழும் மலை கிராமங்களுக்கு சாலை அமைப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி:
ஆய்வு கூட்டம் 
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், குறைவான மக்கள் தொகை கொண்ட இணைப்பு சாலை இல்லாத குக்கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் மலை கிராமங்களுக்கு சாலை அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நடவடிக்கை 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இணைப்பு சாலை இல்லாத மலைவாழ் மக்கள் வாழும் குக்கிராமங்கள் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு சாலைகள் அமைக்க ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகியவற்றின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதில், சாலை அமைப்பதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் முன்மொழிவுகள் அனுப்பி அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மலைவாழ் மக்கள் மற்றும் குக்கிராமங்களில் வாழும் பொதுமக்கள் சாலை வசதிகள் பெறும் வகையில் அனுமதிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
15 நாட்களுக்குள்
மேலும், 15 நாட்களுக்குள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டும், கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும். எனவே, துறை சார்ந்த அலுவலர்கள் முழு கவனம் செலுத்தி குக்கிராமங்களுக்கு இணைப்பு சாலை அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் பிரபு, வருவாய் அலுவலர் சதீஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) மலர்விழி, உதவி செயற்பொறியாளர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story