கொரோனா தொற்று பரவலை தடுக்க மலைவாழ் மக்கள் தடுப்பூசி போட வேண்டும்; தண்டோரா மூலம் போலீசார் விழிப்புணர்வு


கொரோனா தொற்று பரவலை தடுக்க மலைவாழ் மக்கள் தடுப்பூசி போட வேண்டும்; தண்டோரா மூலம் போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 4 July 2021 10:52 PM IST (Updated: 4 July 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவலை தடுக்க மலைவாழ் மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்று தண்டோரா மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தமானிகோம்பை, வரதகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள கோவில் முன்பாகவும், போலீஸ் நிலையங்களிலும் ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.  மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தண்டோரா மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story