விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை


விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை
x
தினத்தந்தி 4 July 2021 11:19 PM IST (Updated: 4 July 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே நிரந்தரமான வேலை கிடைக்காத விரக்தியில் எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே நிரந்தரமான வேலை கிடைக்காத விரக்தியில் எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
விஷம் குடித்த எலக்ட்ரீசியன்
மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர்  ஆனந்தபாபு (வயது 35). எலக்ட்ரீசியன். இவர், மின் வாரிய அலுவலகத்தில் அவ்வப்போது தற்காலிகமாக வேலை பார்த்து வந்துள்ளார். நிரந்தரமான வேலை கிடைக்காததாலும், திருமணம் ஆகாததாலும் விரக்தியில் இருந்து வந்தார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்ற ஆனந்தபாபு மயிலாடுதுறைக்கு வந்து பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு, தனது உறவினர் உதயகுமாரிடம் செல்போனில் கூறியுள்ளார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதையடுத்து உதயகுமாரும் அவரது நண்பர்களும் மயிலாடுதுறைக்கு விரைந்து வந்து, மின் வாரிய அலுவலகம் அருகே மயங்கி கிடந்த ஆனந்தபாபுவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆனந்தபாபு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story