சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு முதியவர்கள் குழந்தைகள் வர தடை
சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு முதியவர்கள் குழந்தைகள் வர தடை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன், விநாயகர் கோவில் உள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், வழிபாட்டு தலங்களுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ் கூறியதாவது:-
கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு விதிகளை கடை பிடிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை. மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story