விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 4 July 2021 11:52 PM IST (Updated: 4 July 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே விபத்தில் வாலிபர் இறந்தார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே வன்னிக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 60). இவர் தனது மகன் பிரகாஷ்(22) உடன் மொபட்டில் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார்.. அப்போது மதுரை மாவட்டம், வடக்கு சக்குடி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷன் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். தவளைகுளம் விலக்கு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மொபட் மீது பிரியதர்ஷன் மோட்டார் சைக்கிள் மோதி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த பிரியதர்ஷன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story