சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் அரசு பஸ்கள்


சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் அரசு பஸ்கள்
x
தினத்தந்தி 4 July 2021 11:59 PM IST (Updated: 4 July 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் இன்று காலை 6 மணி முதல் இயக்கப்படுவதற்காக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் அரசு பஸ்கள் உள்ளன.

கரூர்.
ஊரடங்கினால்...
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பஸ்கள் ஓடவில்லை.  தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் வருகிற 12-ந்தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத பயணிகளுடன் அனைத்து பஸ்களையும் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
தயார் நிலையில் அரசு பஸ்கள்
இதனால் நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பஸ்களில் சுத்தம் செய்யும் பணியிலும், பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும், குறைபாடுகள் உள்ள பஸ்சை கண்டறிந்து, அதனை சரி செய்யும் பணியிலும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.  
இதையடுத்து அந்த பணிகள் அனைத்தும் முடிந்து கரூர் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களும், மாவட்டங்களுக்கு இடையேயும் இன்று காலை 6 மணி முதல் இயக்க அரசு பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 80 சதவீத அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதாகவும், பயணிகளின் வருகையை பொருத்து மீதி பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story