காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் தூய்மைப்பணி


காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் தூய்மைப்பணி
x
தினத்தந்தி 5 July 2021 12:08 AM IST (Updated: 5 July 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் தூய்மைப்பணி

காரமடை

கோவை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்படு கிறது. கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. 

இந்த நிலையில் இன்று கோவில் திறக்கப்படு வதையொட்டி காரமடை அரங்கநாதர் கோவிலில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. கோவில் வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


 மேலும் பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்ற வகையில் பணிகளை செய்தனர்.
இது குறித்து காரமடை பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ் கூறுகையில், கோவில்களை திறக்கவும், பக்தர்கள் வழிபடவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி உள்பட அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றார்.

Next Story