ஓட்டல்கள் கடைகளை திறக்க ஏற்பாடுகள் மும்முரம்


ஓட்டல்கள் கடைகளை திறக்க ஏற்பாடுகள் மும்முரம்
x
தினத்தந்தி 5 July 2021 12:17 AM IST (Updated: 5 July 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல்கள் கடைகளை திறக்க ஏற்பாடுகள் மும்முரம்

கோவை

கோவையில் இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படுகின் றன. ஓட்டல்கள், கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுவதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று முதல் பஸ்கள் இயக்கம்

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட் டது. 

இந்த நிலையில் 8-வது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் கோவை உள்பட தமிழகம் முழுவதும் அரசு பஸ்களை இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள 1050 பஸ்களில் இன்று முதல் சுமார் 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

எனவே கடந்த 2 நாட்க ளாக அரசு பஸ்களில் கோளாறுகளை சரி செய்தல், கிருமி நாசினி தெளித்தல், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தல் போன்ற பணிகளை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தீவிரமாக செய்து முடித்தனர்.

கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா காரணமாக உக்கடம் பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் காய்கறி மார்க்கெட் மீண்டும் ராமர் கோவில் வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

 இந்த நிலையில் இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுவ தால் பஸ் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.அதன்படி, கோவை உக்கடம் பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். 

அவர்கள், லாரியில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை பீய்ச்சியடித்து பஸ் நிலையம் முழுவதையும் சுத்தம் செய்தனர். பின்னர் சிறிய டிராக்டர் போன்ற  வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்தனர். அங்குள்ள போக்குவரத்து அலுவலர்கள் அமரும் அறை பெயிண்ட் அடித்து சுத்தம் செய்யப்பட்டது.

சமூக இடைவெளி

காந்திபுரம் பஸ் நிலையங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பயணிகள் அமரும் இருக்கைகள் சரி செய்யப்பட்டன. 

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், காலை, மதியம் என 2 ஷிப்ட்களாக பஸ்களை இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. ஒருவேளை காலை நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். 


பஸ்களில் பரா மரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து அரசின் அறிவிப்புபடி இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. 

எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பயணிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

ஓட்டல்கள், கடைகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டல்களில் இதுவரை பார்சல் சேவை மட்டும் அனுமதி இருந்தது. இதனால் அங்கு நாற்காலிகள் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் இன்று முதல் ஓட்டலில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இதனால் ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் மேஜை, நாற்காலிகளை சுத்தம் செய்து சமூக இடைவெளியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓட்டல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் ஜவுளிக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளி விட்டு வரும் வகையில் கயிறு கட்டப்பட்டு உள்ளது. துணிகள் தூசி தட்டப்பட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அடுக்கி வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. 

ஊழியர்கள் ஆர்வம்

ஓட்டல், ஜவுளி, நகை உள்ளிட்ட கடைகள் மீண்டும் திறக்கப்படுவ தால் சொந்த ஊருக்கு சென்ற ஊழியர்களை திரும்ப அழைத்து வர  தேவையான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட தனியார் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
கடைகள் அனைத்தும் திறக்கப்படுவதால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அவர்கள், மீண்டும் தங்களுடைய பணி இடங்களுக்கு சென்று பணியாற்ற ஆர்வமாக உள்ளனர்.

கோவையில் இன்று முதல் கோவில்கள், வழிபாட்டுத்தலங்கள், ஓட்டல் கள் உள்பட கடைகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. 

எனவே கடை வீதிகளில் கூட்டம் சேராமல் தடுக்கவும், கொரோனா தடுப்பு விதிக ளை பொதுமக்கள் பின்பற்றவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 


Next Story