இலவச தடுப்பூசி மருத்துவ முகாம்
இலவச தடுப்பூசி மருத்துவ முகாம் நடந்தது.
கீழக்கரை,
கீழக்கரையில் சுகாதாரத்துறை மற்றும் செய்யது மீரா பீவி அறக்கட்டளை சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமில் 408 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் மத்தீன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நவாஸ்கனி எம்.பி, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர், டாக்டர் ஆசிக் அமீன், தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனி குமார், நகராட்சி ஆணையர் பூபதி, தெற்கு தெரு ஜமாத் துணை செயலாளர் பரிதா சுபேர் ஆகியோர் கலந்து கொண் டனர். வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். முகாம் ஏற்பாடுகளை செய்யது மீரா பீவி அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஜே.கமால் ஏற்பாட்டில் சதக்கத்துல்லா ஆலிம் செய்திருந்தார்.
Related Tags :
Next Story