டாஸ்மாக்கடையில் மது பாட்டில்கள் திருட்டு
தாயில்பட்டி அருகே டாஸ்மாக்கடையில் மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் பஸ் ஸ்டாப்பில் அரசு மதுபானக்கடை உள்ளது. இதில் விற்பனையாளராக விஜயகரிசல்குளத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 47) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் டாஸ்மாக்கடையை திறக்க சென்றார். அப்போது ஷட்டரில் இருந்த பூட்டு காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்றபோது 31 மதுபாட்டில்கள், ரூ.5,760 ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக வெம்பக்கோட்டை போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story