கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு- உயிரிழப்பு தொடர்ந்து குறைவு


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு- உயிரிழப்பு தொடர்ந்து குறைவு
x
தினத்தந்தி 5 July 2021 1:07 AM IST (Updated: 5 July 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

பெங்களூரு:

பெங்களூருவில் 352 பேர்

  கர்நாடக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 83 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 1,564 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்து 53 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.

  புதிதாக பெங்களூருவில் 352 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். அடுத்தபடியாக மைசூருவில் 162 பேரும், தட்சிண கன்னடாவில் 154 பேரும், குடகில் 150 பேரும், துமகூருவில் 116 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பல்லாரி, பெலகாவி, சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு உள்பட 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. பாகல்கோட்டை, யாதகிரியில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை.

மருத்துவ சிகிச்சை

  மைசூருவில் 9 பேர், தட்சிண கன்னடாவில் 8 பேர், பல்லாரியில் 7 பேர், தார்வாரில் 5 பேர், பெங்களூரு நகரில் 3 பேர் என மொத்தம் 59 பேர் இறந்தனர்.

  இதன்மூலம் சாவு எண்ணிக்கை 35 ஆயிரத்து 367 ஆக உயர்ந்தது. 11 மாவட்டங்களி்ல் உயிரிழப்பு இல்லை. நேற்று 4,775 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை 27 லட்சத்து 73 ஆயிரத்து 407 ஆக உயர்ந்து உள்ளது. 44 ஆயிரத்து 846 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story