பாம்பை பிடித்து கழுத்தில் சுற்றி கொண்டு சைக்கிளில் ‘ஹாயாக’ வலம் வந்த முதியவர்
பாம்பை கழுத்தில் போட்டு சைக்கிளில் முதியவர் ஒருவர் ‘ஹாயாக’ வலம் வந்தார்.
பெலகாவி:
பெலகாவி அருகே ஹர்கங்கா கிராமத்தில் வசித்து வரும் ஒரு முதியவரின் வீட்டிற்குள் நேற்று காலை ஒரு நாகபாம்பு புகுந்தது. ஆனால் பாம்பை கண்டு அஞ்சாத அந்த முதியவர் பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை தனது கழுத்தில் சுற்றினார்.
இதன்பின்னர் தனது சைக்கிளை எடுத்து கொண்டு பாம்புடன், முதியவர் கிராமத்தில் ஹாயாக வலம் வந்தார். இதனை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் பாம்பை விட்டுவிடும்படி கூறினர். இதையடுத்து அந்த முதியவர் பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
Related Tags :
Next Story