நாய்கள் கடித்ததில் காயமடைந்த மான் மீட்பு


நாய்கள் கடித்ததில் காயமடைந்த மான் மீட்பு
x
தினத்தந்தி 5 July 2021 1:56 AM IST (Updated: 5 July 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

நாய்கள் கடித்ததில் காயமடைந்த மான் மீட்கப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் சரியாக இரை, தண்ணீர் கிடைக்காததால், அவ்வப்போது மான்கள் இரை, தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வழக்கம். அதேபோல் பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் ஏரி பகுதிக்கு நேற்று காலை சுமார் 2 வயது பெண் மான் வந்தது. அப்போது அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் அந்த மானை தூரத்திச்சென்று கடித்தன. இதனை கண்ட அந்தப்பகுதியில் நின்ற இளைஞர்கள், நாய்களை விரட்டி விட்டு, காயமடைந்த மானை மீட்டு, உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம் மானை ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மானுக்கு கால்நடைத்துறையினர் மூலம் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story