நாமக்கல் அருகே தொழிலாளியை வெட்டி கொன்று நாடகமாடிய மகன் கைது பரபரப்பு தகவல்கள்


நாமக்கல் அருகே தொழிலாளியை வெட்டி கொன்று நாடகமாடிய மகன் கைது பரபரப்பு தகவல்கள்
x

நாமக்கல் அருகே தொழிலாளியை வெட்டி கொன்று நாடகமாடிய மகன் கைது பரபரப்பு தகவல்கள்

நாமக்கல்:
நாமக்கல் அருகே தொழிலாளியை வெட்டி கொன்று விட்டு நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிடுக்கிப்பிடி விசாரணை
நாமக்கல் அருகே உள்ள வீசாணம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வையாபுரி (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் உள்ள கீற்று கொட்டாயில் கழுத்துப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலின்பேரில் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் குமார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வையாபுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் வையாபுரியின் மகன் வெங்கடேஷ் (40) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் வெங்கடேஷ் அரிவாளால் தந்தை வையாபுரியை வெட்டி கொன்றுவிட்டு யாரோ கொன்று விட்டது போல் நாடகமாடியது தெரியவந்துள்ளது.
நாடகம்
அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் வெங்கடேஷ் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்ததும், மதுகுடிப்பதற்கு அடிக்கடி பணம் கேட்டு வையாபுரியிடம் தகராறு செய்து வந்ததாகவும், அவ்வப்போது வையாபுரியை தாக்கி வந்ததும் தெரியவந்தது. இதனால் வையாபுரி வீட்டின் பின்புறம் உள்ள கீற்று கொட்டகையில் தான் வசித்ததும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கீற்று கொட்டகை தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் காயமடைந்த வையாபுரி, தனது மகன் வெங்கடேஷ் தான் கொட்டகைக்கு தீ வைத்ததாக அப்பகுதியினரிடம் கூறியுள்ளார்.
இதனால் வையாபுரியுடன், வெங்கடேஷ் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் அரிவாளால் வையாபுரியை சரமாரியாக வெட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்த விட்டத்தில் இறந்த வையாபுரியின் உடலை தூக்கி கட்டியதோடு, அவரை யாரோ கொலை செய்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் அவரது தந்தை வையாபுரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

Next Story