காங்கிரஸ் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு


காங்கிரஸ் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 5 July 2021 2:09 AM IST (Updated: 5 July 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே காங்கிரஸ் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே ஆட்கொண்டார்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் தங்கராஜ் (வயது 38). விவசாயியான இவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாகவும், விவசாய சங்கத்திலும் பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மருதையா. பால் வியாபாரியான இவர் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
நேற்று காலையில் தங்கராஜ் தனது வயலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருதையா திடீரென்று தங்கராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தங்கராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மருதையா தப்பிச் சென்றார். படுகாயம் அடைந்த தங்கராஜிக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதையாவை தேடி வருகின்றனர்.

Next Story