2-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 52 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 456 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 471 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. நேற்று 989 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2-வது நாளாக நேற்றும் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story