துவாக்குடியில் டாஸ்மாக் கடை விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.3 ஆயிரம் பறிப்பு

துவாக்குடியில் டாஸ்மாக் கடை விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.3 ஆயிரம் பறிப்பு
x
தினத்தந்தி 5 July 2021 6:48 AM IST (Updated: 5 July 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

துவாக்குடியில் டாஸ்மாக் கடை விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர், 

துவாக்குடியில் டாஸ்மாக் கடை விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

டாஸ்மாக் ஊழியர்

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்  (வயது 45). இவர் துவாக்குடி அருகே உள்ள கீலமாங்காவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். 
இவர் நேற்று மாலை எப்பொழுதும் போல டாஸ்மார்க்கில் தனது பணியை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வந்தனர். 

அரிவாள் வெட்டு

அவர்கள், தர்மராஜின் மொபட்டை உதைத்து, அவரை கீழே தள்ளினர். பின்னர் அவரை அரிவாளால், கை மற்றும் கால் பகுதிகளில் வெட்டி அவரிடமிருந்த ரூ.3 ஆயிரத்ைத பறித்துச்சென்றனர். 

இதுபற்றி தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தர்மராஜை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

Next Story