குடியிருப்போர்கள் 3 மாதத்தில் வீட்டை காலி செய்தால் கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் 1½ ஆண்டுக்குள் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் வசிப்பவர்கள் 3 மாதத்தில் வீட்டை காலி செய்து தந்தால் 1½ ஆண்டுக்குள் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும் என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்தார்.
சென்னை,
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு, மறுகட்டுமானம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் கோட்டூர்புரம் மற்றும் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம், பல்லடுக்கு குடியிருப்புகளை கட்டுவதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்காத நிலையில், இத்திட்டத்தினை செயலாக்குவது தொடர்பாக ஊரகத்தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் நேற்று கருத்துக்கேட்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
நவீன வசதிகளுடன்...
கருணாநிதியால் 1970-74 வரையிலான காலத்தில் 82 தொகுப்புகளில் மொத்தம் 1,656 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைத்தளம் மற்றும் 2 அடுக்குகளில் 213 சதுர அடியில் கட்டப்பட்டன. 2009 முதல் 2015 வரையிலான காலத்தில் 8 தொகுப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் திட்டத்தின் கீழ் 180 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைத்தளம் மற்றும் 3 அடுக்குகளில் 319 மற்றும் 385 சதுர அடியில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
மீதமுள்ள 74 தொகுப்புகளில் உள்ள 1,476 சிதலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, வாகன நிறுத்த வசதி கொண்ட தாங்கு தளத்துடன் கூடிய 5 அடுக்குளில் ஒவ்வொரு குடியிருப்பும் 420 சதுர அடி பரப்பளவில் வரவேற்பறை, உறங்கும் அறை, சமையலறை, தனித்தனியே குளியலறை மற்றும் கழிவறை, மின்தூக்கி, ஜெனரேட்டர் உள்ளடக்கிய நவீன வசதிகளுடன் கூடிய 20 தொகுப்புகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய குடியிருப்புகள்
இந்த திட்டம், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட இருப்பதால், குடியிருப்புதாரர்களின் முழு ஒத்துழைப்புடன் பழைய குடியிருப்புகளை 3 மாத காலத்திற்குள் காலி செய்யும் பட்சத்தில், அக்குடியிருப்புகளை அகற்றிவிட்டு 18 மாத காலத்திற்குள் (1½ ஆண்டுகள்) புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துக்கேட்பு கூட்டத்தின்போது, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் மா.கோவிந்த ராவ், தலைமைப்பொறியாளர் ராம.சேதுபதி, கண்காணிப்பு பொறியாளர் சு.சுந்தர்ராஜன், நிர்வாகப்பொறியாளர் கு.சேகர் உள்ளிட்ட வாரிய பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story