தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டல்களில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட்டனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்ததால், ஓட்டல்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்ததால், ஓட்டல்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து வகையான செயல்பாடுகளும் முடக்கப்பட்டு இருந்தன. கடந்த சில வாரங்களாக படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. நேற்று அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்டது. அதே போன்று ஓட்டல்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது.
ஓட்டல்
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களும் நேற்று வழக்கம் போல் இயங்கின. ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து மக்கள் சாப்பிட்டனர். பெரும்பாலான ஓட்டல்களில் மக்கள் ஆர்வத்துடன் சாப்பிட்டனர். இதனால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இ-பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமானவர்கள் வெளியூரில் இருந்து கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊருக்கு சென்றனர்.
Related Tags :
Next Story