கயத்தாறு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது


கயத்தாறு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 July 2021 6:06 PM IST (Updated: 5 July 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கயத்தாறு:
கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி பஞ்சாயத்து ராம்தாஸ் காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் ஆக்னல் (வயது 29). இவர் செட்டிகுறிச்சி பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து சென்ற கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் ஆகியோர் அவரை அழைத்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா விற்றதாக ஆக்னலை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story