புயலில் சேதமடைந்த நாகூர் தர்கா குளம் சீரமைக்கும் பணி
கடந்த ஆண்டு நிவர் மற்றும் புரெவி புயல்களால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.
நாகூர்,
புரெவி புயலால் சேதமடைந்த நாகூர் தர்கா குளம் ரூ.4 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நிவர் மற்றும் புரெவி புயல்களால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதில் பல லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதேபோல் நாகூர் தர்காவிற்கு சொந்தமான குளத்தின் தென்கரை, வடகரை, மேல்கரை மற்றும் கீழ்கரை பகுதிகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. நாகூர் தர்கா குளத்தையும் சீரமைக்க தமிழக அரசு ரூ.5.37 கோடி ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து ரூ.4.37 கோடி மதிப்பில் நகூர் தர்கா குளத்தை சீரமைக்கும் பணியும், ரூ.1 கோடி மதிப்பில் குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து குளத்தில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன்பின்னர் குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் 6 மாதங்களில் பணியை முடிப்பதற்காக பொதுப்பணித்துறையினர் இரவு, பகலாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story