மெஞ்ஞானபுரம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்ட்ல்


மெஞ்ஞானபுரம் அருகே  செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்ட்ல்
x
தினத்தந்தி 5 July 2021 8:49 PM IST (Updated: 5 July 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் வீட்டிலிருந்து துரத்திய மனைவியுடன் சேர்த்து வைக்ககோரி தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்

சாத்தான்குளம்:
குடும்ப தகராறில் வீட்டிலிருந்து துரத்திய மனைவியுடன் சேர்த்து வைக்ககோரி தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக கீழே இறக்கினர்.
மனைவியுடன் தகராறு
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் லிங்கத்துரை (வயது 44). இவருக்கு மனைவி பானுமதி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கூலி தொழிலாளியான லிங்கத்துரை தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி புகார் செய்ததால், மெஞ்ஞானபுரம் போலீசார் லிங்கத்துரை மீது வழக்குபதிவு செய்தனர். 
தற்கொலை மிரட்டல்
தொடர்ந்து லிங்கத்துரை மது அருந்தி வந்து வீட்டில் தகராறு செய்ததால், அவரை வீட்டை விட்டு மனைவி துரத்தி விட்டுள்ளார். இது குறித்து அவர் மெஞ்ஞானபுரம் போலீசாரிடம் புகார் ெசய்தாராம். இதை போலீசார் இவரை கண்டு கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த லிங்கத்துரை நேற்றுமதியம் 12 மணியளவில் சாத்தான்குளம் வந்து வாரச்சந்தை அருகில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். 
பேச்சுவார்த்தை
அப்பகுதிக்கு ் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,  மணடல துணை தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் லிங்கத்துரையிடம் பேச்சு வார்த்தை நடத்தி மனைவியுடன் சேர்த்து வைப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் ஒரு மணி நேரத்துக்குபிறகு அவர் இறங்கி வர சம்மதித்தார். ஆனால் அவரால் இறங்கி வர முடியவில்லை. உடன் தீயணைப்பு நிலைய அலுவலர் ஹேரிஸ் தாமஸ் செல்வதாஸ் தலைமையில் மணிகண்டன், சீனிவாசன், பிரவீன் சாமுவேல் டவரில் ஏறி அவரை கீழே இறக்கி கொண்டுவந்தனர். பின்னர் அவருக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்துக்கு அவரை சென்று மனைவியுடன் சேர்த்து வைப்பதற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Next Story