கீழ்வேளூரில் ஓடம்போக்கி ஆற்றின் தரைப்பாலத்தில் சேதமடைந்து காணப்படும் தடுப்புச்சுவர் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


கீழ்வேளூரில் ஓடம்போக்கி ஆற்றின் தரைப்பாலத்தில் சேதமடைந்து காணப்படும் தடுப்புச்சுவர் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 July 2021 9:07 PM IST (Updated: 5 July 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூரில் ஓடம்போக்கி ஆற்றின் தரைப்பாலத்தில் சேதமடைந்து காணப்படும் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கல், 

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடம்போக்கி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் தரைப்பாலம் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த சில வருடங்களாக இந்த பாலத்தில் உள்ள இரு புறங்களில் தடுப்பு சுவர் உடைந்தும், பாலத்தில் சில பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு பகுதிகளுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் தினசரி அலுவல் காரணமாக செல்லும் மக்கள் தினமும் இந்த சாலை வழியாக பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.

தற்போது நாகை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலை துறையினர் பாரமரித்து வருகின்றனர். இந்த தரைப்பாலத்தில் இரண்டு பக்க தடுப்பு சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. சேதமடைந்த இடத்தில் இரும்பிலான தடுப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் உள்ள பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் தடுமாறி ஆற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகமும் ஓடம் போக்கி ஆற்றின் தரைப்பாலத்தில் சேதமடைந்த காணப்படும் தடுப்பு சுவர்களை 5 அடி உயரத்துக்கு கட்டியும், தரைப்பாலத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story