பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் குமார், விஜய் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாண்டியன் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். சமையல் கியாஸ் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில தொழிற்சங்க துணை தலைவர் விஜய் வெங்கடேஷ், விஜயகாந்த் மன்ற மாநில துணை செயலாளர் புல்லட் மாரிமுத்து, மாவட்ட அவைத்தலைவர்கள் தங்கவேல், உதயகுமார், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் விக்னேஷ் குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story