இந்திய அணியில் இடம் பிடித்த ஊட்டியை சேர்ந்த 4 மாணவிகள்
இந்திய அணியில் இடம் பிடித்த ஊட்டியை சேர்ந்த 4 மாணவிகள்
ஊட்டி
உலக மினி கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 23 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான மினி கால்பந்து உலக கோப்பை போட்டி, வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை உக்ரைன் நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணியை தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.
இந்த அணியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர் ஊட்டி தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவிகள் சவுமியா, ஜாய்ஸ்ரீ, ஹெப்சிபா கிரேஸ், பிளஸ்-2 மாணவி சஞ்சனா ஆகிய 4 பேர் பெண்களுக்கான மினி கால்பந்து உலக கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்று உள்ளனர்.
இவர்கள் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் உக்ரைன் செல்ல உள்ளனர். இந்த நிலையில் நேற்று உலக கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்ற 4 மாணவிகள், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Related Tags :
Next Story