வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் மதுபானங்கள் அழிப்பு


வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் மதுபானங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 5 July 2021 10:47 PM IST (Updated: 5 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அழிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி:
மதுபாட்டில்கள் கடத்தல்
கொரோனா ஊரடங்கு காலத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வந்தன. இதனை தடுக்க கிருஷ்ணகிரி மது விலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக மதுபானங்களை கடத்தி வந்ததாக 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 ஆயிரத்து 754 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடத்தலில் ஈடுப்பட்டதாக 146 பேர் கைது செய்யப்பட்டனர்.
அழிப்பு
குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 ஆயிரத்து 918 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட கர்நாடக மற்றும் வெளி மாநில மதுபாட்டில்கள் நேற்று மதுவிலக்கு பிரிவு போலீஸ் அலுவலகம் அருகே உள்ள குட்டையில் தீ வைத்து அழிக்கப்பட்டன.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட மது விலக்கு ஆயத்தீர்வை துணை கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் 950 லிட்டர் மதுபானங்களை தீ வைத்து அழித்தனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story