நெகமம் அருகே காரில் மது கடத்திய 3 பேர் கைது


நெகமம் அருகே காரில் மது கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2021 10:47 PM IST (Updated: 5 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே காரில் மது கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 96 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெகமம்

நெகமம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நெகமம் கொண்டேகவுண்டன்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் மேடு அருகே சந்தேகப்படும் படியாக 3 பேர், காருடன் நின்று கொண்டிருந்தனர்.

 அவர்கள்  3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் சோதனை செய்தனர்.

அப்போது காரில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தாராபுரத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 38), அரவிந்த் (26), நசூருதீன் (37) என்பதும், மதுபாட்டில்களை காரில் கடந்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 96 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story