விருத்தாசலம், கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையகளில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்


விருத்தாசலம், கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையகளில்  மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
x
தினத்தந்தி 5 July 2021 5:35 PM GMT (Updated: 5 July 2021 5:35 PM GMT)

விருத்தாசலம், கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் வகையில், இலங்கியனூர் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.  இங்கு சுற்றிலும் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்து வந்திருந்தனர்.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கவில்லை. இதனால் விவசாயிகள் இரவு, பகல் பாராமல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே தங்களது நெல்லை வைத்துக்கொண்டு அங்கேயே காவல் இருந்தனர். இதில் நெல்லை ஆங்காங்கே விவசாயிகள் குவியல் குவியலாக குவித்து வைத்திருந்தனர்.

மழையில் நனைந்தது

நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால், நெல் குவியல்கள் மழையில் நனைந்து போனது. விவசாயிகள் அவசர அவசரமாக தார்ப்பாய்களை கொண்டு மூடி பாதுகாத்தனர். 

இருப்பினும் அந்த பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய நீர் நெல் குவியலையும் சூழந்து நின்றது. இதனால் விவசாயிகளின் முயற்சி பலனளிக்காமல் போனது. 
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நெல் மணிகள் நனைந்து போய் இருந்தன. 

அவைகள் அனைத்தும் தற்போது முளைக்க தொடங்கிய நிலையில், மீண்டும் மழையில் நெல் நனைந்து போனது அவர்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.

வியாபாரிகள் நெல் கொள்முதல்

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது ஒரு மாதத்திற்கும் மேலாக நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்து காத்திருக்கிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் எங்களை கண்டு கொள்ளாமல், வியாபாரிகள் எடுத்து வரும் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்து விட்டு சென்று விடுகின்றனர். 


விவசாயிகளுக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டும், தனியார் வியாபாரிகளுக்கு மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. தற்போது பெய்த மழையால் சுமார் 10 ஆயிரம் மூட்டை நெல்கள் மழையில் நனைந்து போனது. மேலும் ஏற்கனவே பெய்த மழையில் நனைந்த நெல்கள் முளைக்க தொடங்கி விட்டது. இந்த நஷ்டத்துக்கு அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தோட்டப்பட்டு
இதேபோல், கடலூர் அடுத்த தோட்டப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கு சுற்றிலும் உள்ள விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த சுமார் 200 நெல் மூட்டைகள்  மழையில் நனைந்து சேதமாகி விட்டது. 

மேலும் கொள்முதல் நிலையத்தில் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் நெல் குவியல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து இருக்கு் நிலை ஏறு்பட்டு ள்ளதால், அவற்றை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் நேற்று ஈடுபட்டனர். இதன் மூலம் சேதமான நெல்லின் அளவு மேலு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை  ஏற்படுத்தும் என்பதால், மிகுந்த கவலையுடன் உள்ளனர்.

Next Story