ஆன்லைன் லாட்டரி விற்ற 4 பேர் கைது


ஆன்லைன் லாட்டரி விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2021 11:13 PM IST (Updated: 5 July 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இளையான்குடி,

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக பூச்சியநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 62), இளையான்குடியை சேர்ந்த அப்துல் காதர் அல்ஹாப் (43), ஜாபர் அலி(60) முகம்மது மாலிக் (51.) ஆகிய 4 பேரை இளையான்குடி போலீசார் கைது செய்தனர். அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றதாக வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.


Next Story