டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பீர் குடித்த திருடன்


டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பீர் குடித்த திருடன்
x
தினத்தந்தி 5 July 2021 11:15 PM IST (Updated: 5 July 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பீர் குடித்துவிட்டு, உயர்ரக மதுபாட்டில்களை திருடி சென்ற திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி: 

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உள்ளே சென்று பார்த்தபோது கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா திருப்பி வைக்கப்பட்டிருந்தது.

 மேலும் கடையின் சரக்கு விவரங்களை சரிபார்த்த போது ஒரு பீர், 4 உயர்ரக மதுபான பாட்டில்கள் திருடு போயிருந்தது. தகவல் அறிந்ததும் தென்கரை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

  
அப்போது அதில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர், கடைக்குள் வந்ததும் ஒரு பீர் பாட்டிலை எடுத்து குடித்து விட்டு, சி.சி.டி.வி. கேமராவை வேறு திசைக்கு திருப்பி வைத்துவிட்டு 4 உயர்ரக மதுபான பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. 


கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொண்டு அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story